நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் ஓர் பார்வை..!தமிழகத்தில் கடந்த உள்ளாட்சி தேர்தல் 17.10.2011 அன்று வாக்குப்பதிவு நடைபெற்று 21.10.2011 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.


தேர்தல் அட்டவணை: 22.09.2011 அன்று வேட்பு மனு தாக்கல் துவக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் 29.09.2011 என்று அறிவிக்கப்பட்டது. மனு பரிசீலனை:30.09.2011, திரும்பப் பெற கடைசி நாள்: 03.10.2011 என்ற முறையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

2011 உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்பகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும், ஊராட்சிப் பகுதிகளில் வாக்குச் சீட்டுப் பதிவு முறையும் பயன்படுத்தப்பட்டன.

ஊராட்சி மன்ற தலைவர்:

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் கடந்த 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் 5450 வாக்காளர்களை கொண்டிருந்தது. அன்றைய ஊராட்சி மன்ற தலைவர் பதவியின் இடஒதுக்கீட்டின்படி பொது பட்டியலில் ஒதுக்கப்பட்டிருந்தது. சரி இப்ப நம்ம அன்றைய தினம் யார்.? யார்..? போட்டியிட்டது எத்தனை ஓட்டுகள் பதிவானது என்பதை பற்றி பார்ப்போம்...

மொத்த வாக்காளர்கள்: 5450
பதிவான வாக்குகள்: 3923 (71.98%)
செல்லத்தக்க வாக்குகள்: 3821
செல்லாத வாக்குகள்: 102

தலைவர் பதவிக்கு மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர். இதில் ஒருவர் மட்டுமே வைப்புத்தொகை பெற்றார். மற்றவர்கள் அனைவரும் வைப்புத்தொகையை இழந்தனர். இதனிடையில் முஹம்மது மீராசா அவர்கள் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு 1519 (38.72) வாக்குகள் பெற்று 144 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றவர்: முகமது மீராசா (ஏணி)
பெற்ற வாக்கு: 1519 (38.72%) 

ஊராட்சி வார்டு உறுப்பினர்:


ஆவுடையார்கோவில் ஒன்றிய கவுன்சிலர்:

மொத்த வாக்காளர்கள்: 4179
பதிவான வாக்குகள்: 2991 (71.57%)
செல்லத்தக்க வாக்குகள்: 2891
செல்லாத வாக்குகள்: 100

வெற்றி பெற்றவர்: முகமது இக்பால் (திமுக) உதயசூரியன்
பெற்ற வாக்கு: 789 (26.38%) 

மாவட்ட கவுன்சிலர்:

மொத்த வாக்காளர்கள்: 37982
பதிவான வாக்குகள்: 29637 (78.03%)
செல்லத்தக்க வாக்குகள்: 28004
செல்லாத வாக்குகள்: 1633

வெற்றி பெற்றவர்: பாமா.க (அதிமுக) இரட்டை இலை
பெற்ற வாக்கு: 7176 (24.21%) 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments