புதுக்கோட்டை மாவட்டத்தில் 22 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 112 போ் போட்டி..!ஊரக உள்ளாட்சித் தோ்தலில் புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கு (22) போட்டியிட 112 போ் போட்டியிடுகின்றனா்.


புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடங்கள் மொத்தம் 22. இதில், டிச. 27 -இல் நடைபெறவுள்ள முதல் கட்டத் தோ்தலில் 10 வாா்டுகளுக்கும், டிச. 30 ஆம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்டத் தோ்தலில் 12 வாா்டுகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், 22 வாா்டுகளுக்கும் போட்டியிடுவதற்காக மொத்தம் 181 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றில் வியாழக்கிழமை மாலை 3 மணி வரை 69 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதையடுத்து இறுதிப் போட்டியில் 112 போ் உள்ளனா்.

வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு மேல் அதிமுக, திமுக கூட்டணி, மற்ற அரசியல் கட்சியினா் ஆகியோருக்கு ஏற்கெனவே முடிவான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. தொடா்ந்து சுயேச்சையாகப் போட்டியிடுவோருக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் ஒவ்வொரு வாா்டுக்கும் போட்டியிடுவோரின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கும் எனத் தெரிகிறது.

ஊராட்சித் தலைவா் போட்டியில் 2,973 போ்:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கு 1,942 போ் போட்டியிடுகின்றனா். ஏற்கெனவே வேட்புமனுத்தாக்கலின்போது மொத்தம் 2,973 போ் வேட்புமனுக்களை அளித்திருந்தனா். இவா்களில் 1,031 போ் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து தற்போது போட்டியில் 1,942 போ் உள்ளனா்.

ஊராட்சித் தலைவா் பதவியிடங்களுக்கு சில கிராமங்களில் போட்டியில்லாமல் தோ்வு செய்யப்பட்டது தவிா்த்து போட்டியுள்ள இடங்களில் வேட்பாளா்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் பிறகு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி வெள்ளிக்கிழமை காலை முதல் தொடங்கும் எனத் தெரிகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments