கோவை பொதுக்கூட்டத்தில் சிக்கி கொண்ட ஐயப்ப பக்தர்களுக்கு சாலையை கடக்க உதவிய இஸ்லாமியர்கள்



கோவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இஸ்லாமியர்கள் சாலையில் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது சாலையை கடக்க முடியாமல் தவித்த ஐயப்ப பக்தர்களை சிலர் உதவி செய்த வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


கோவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் நேற்று வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக  மாலை ஆற்றுப்பாலத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். ஒரே நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் பாலக்காடு சாலை, பொள்ளாச்சி சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.

இந்நிலையில் மாலை இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் வேளையில், போராட்டத்திற்கு வந்திருந்த இஸ்லாமியர்கள் நடு ரோட்டிலேயே வரிசையாக நின்று தொழுகை நடத்தினர். இதனிடையே பொது கூட்டத்தினை கடக்க முடியாமல் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து வந்த பக்தர்கள் தவித்தனர்.

அப்போது இஸ்லாமியர்கள் ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல், அவர்களுக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் சாலையைக் கடந்து போக உதவி செய்தனர் . இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

இந்த காட்சி பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்து இருந்தது. இதனிடையே வன்முறை எதுவும் இன்றி அமைதியாக பொது கூட்டம் நிறைவடைந்தது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments