புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் 2 வயது குழந்தையை கடத்த முயன்றவர் சிக்கினார்புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சனிக்கிழமை அதிகாலை 2 வயது குழந்தையை கடத்த முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். பலர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஒருவர் 2 வயது ஆண் குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார். அவர் மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரிடம் குழந்தை யாருடையது என்று விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் குழந்தையை ஆஸ்பத்திரியில் இருந்து கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்ததுடன் அவரிடமிருந்து குழந்தையை மீட்டு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 போலீசார் குழந்தையை கடத்திய நபரிடம் விசாரணை நடத்திய போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியை சேர்ந்த  சுந்தரராஜன் என்பதும், காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்யா என்பவரின் 2 வயது குழந்தையை கடத்தியதும் தெரியவந்தது. சுந்தரராஜன் குழந்தையை எதற்காக கடத்தினார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments