புதுக்கோட்டை உட்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..



குமரிக்கடல் பகுதியில் நிலவிவரும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக புதுக்கோட்டை, நாகை,சிவகங்கை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் லேசான மழையும், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என கூறியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கோபாலப்பட்டிணத்தில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீசும் என்பதால், குமரி கடல், மன்னார் வளைகுடா பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments