ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை மீட்பு!




ராஜஸ்தானில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது குழந்தை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.

சிரோஹி மாவட்டத்தின் சிபா கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயதே ஆன சிறுவன், அருகில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்தான். அவனது அலறல் குரல் கேட்டு ஓடி வந்த பெற்றோரும், அருகில் இருந்தவர்களும் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.


மாவட்ட உதவி ஆட்சியர் பகிரத் சவுத்ரி தலைமையில் விரைந்து சென்ற அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆழ்குழாய் கிணற்றில் 15 அடியில் சிக்கி இருந்த சிறுவனுக்கு ஆக்சிஜனும், தண்ணீரும் அளிக்கப்பட்டது. அந்த கிணற்றுக்கு அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அருகில் ஆம்புலன்ஸ் உடன் காத்திருந்த மருத்துவ குழு குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறது. குழந்தையை பத்திரமாக மீட்ட மாநில பேரிடர் குழுவினருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் அப்பகுதி மக்கள், குழந்தையின் உறவினர்கள், பெற்றோர் உட்பட அனைவரும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments