புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தூக்கி வீசப்பட்ட பிறந்த 3 நாட்களே ஆன ஆண் குழந்தை!




பிறந்து மூன்று நாட்களே ஆன நிலையில் தர்கா அருகில் கீழே விட்டுச் சென்ற ஆண் குழந்தையை சைல்டு லைன் அமைப்பினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகில் உள்ள ஒடுகம்பட்டி ஒலியுல்லா தர்கா அருகில் வியாழக்கிழமை (05.12.2019) மாலை பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை யாரோ விட்டுச் சென்றுள்ளனர்.

 குழந்தை கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சைல்டு லைனுக்கு தகவல் சொல்ல, அவர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

 மருத்துவமனையில் தயாராக இருந்த முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலான மருத்துக் குழுவினர் குழந்தைக்கு அவசர சிகிச்சை அளித்தனர். 

குழந்தையை வளர்க்க முடியாத யாரோ கொண்டு வந்து போட்டிருக்களாம் என்று கூறப்படுகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments