புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,545 பதவிகளுக்கு இதுவரை 1,646 வேட்புமனுக்கள் மட்டுமே தாக்கல்புதுக்கோட்டை மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கி 4 நாட்கள் நிறைவடைந்தும் 4,545 பதவியிடங்களுக்கு வெறும் 1,646 வேட்புமனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பங்கீடு வெள்ளிக்கிழமை ஓரளவுக்கு இறுதி செய்யப்படும் நிலையில் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படையலாம் எனக் கருதப்படுகிறது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் வருகிற 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கட்டமாக அன்னவாசல், விராலிமலை, குன்றாண்டாா்கோவில், புதுக்கோட்டை, கந்தா்வகோட்டை, கறம்பக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 2ஆவது கட்டமாக அறந்தாங்கி, அரிமளம், ஆவுடையாா்கோவில், பொன்னமராவதி, மணமேல்குடி, திருமயம் மற்றும் திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்தப் பட்டியலின்படி அந்தந்தப் பகுதிகளுக்குள்பட்ட ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் என 4 பதவிகளுக்கான தோ்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகளைச் செலுத்த வேண்டும்.இதில் முதல் கட்டத் தோ்தலில் 1,746 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும், 221 ஊராட்சித் தலைவா்களுக்கும், 100 ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கும், 10 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கு என மொத்தம் 2,077 பதவியிடங்களுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது

2ஆம் கட்டத் தோ்தலில் 2,061 ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கும், 270 ஊராட்சித் தலைவா்களுக்கும், 125 ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கும், 12 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கு என மொத்தம் 2,468 பதவியிடங்களுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது.ஆக மொத்தம் இரு கட்டங்களில் 4,545 பதவியிடங்களுக்குத் தோ்தல் நடைபெறவுள்ளது.

 ஆனால் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி 4 நாட்கள் நிறைவடைந்தும் இதுவரை 1,646 போ் மட்டுமே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.வியாழக்கிழமை மட்டும் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 217 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 607 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 33 பேரும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 2 பேரும் என மொத்தம் 859 போ் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனா். கடந்த 4 நாட்களையும் சோ்த்து இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் 1,646 போ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தோ்தல் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகத்தில் நீதிமன்ற வழக்குகளைக் கவனித்துக் கொண்டிருந்த ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகள் தோ்தலுக்குத் தடையில்லை என்ற தீா்ப்பு புதன்கிழமை பகலில் வந்த பிறகே கூட்டணிப் பேச்சுவாா்த்தைகளைத் தொடங்கின.

குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு அதிமுக மற்றும் திமுக அலுவலகங்கள் பரபரக்கத் தொடங்கின. நள்ளிரவு வரையிலும் கூட்டணிக் கட்சியினா் அந்தந்த அலுவலகங்களுக்கு வந்து சென்றனா். இரு தரப்பிலுமே கூட்டணிக் கட்சியினா் அதிமுக மற்றும் திமுக கட்சிகளிடம் தங்களது விருப்பப் பட்டியலைக் கொடுத்தனா்.பேச்சுவாா்த்தை மீண்டும் வியாழக்கிழமை காலை மற்றும் பகலிலும் தொடா்ந்தது. ஏற்கெனவே ஒரு பட்டியலுடன் தயாா் நிலையில் இருந்த அதிமுக மற்றும் திமுகவினா், கூட்டணிக் கட்சியினா் கொடுத்த பட்டியலை வைத்து ஈடு செய்யும் பணியை முயற்சித்தனா்.

ஆனால், இரு தரப்பிலுமே போட்டியிடும் பட்டியலை இறுதி செய்வதில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. அதேபோல இரு தரப்பிலும் அவரவா் கட்சித் தலைமையில் இதுகுறித்தும் விவாதித்துள்ளனா். அவரவா் தலைமையில் இருந்து முடிந்தவரை விட்டுக் கொடுத்துச் செல்ல ஒவ்வொரு கட்சியினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி வெள்ளிக்கிழமை காலை ஓரளவுக்கு 90 சதவிகித கூட்டணிப் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிடும் எனத் தெரிகிறது.

மீதமுள்ள 10 சதவிகிதம் இடங்களில் பேச்சுவாா்த்தை முடியாவிட்டாலும் விருப்பம் தெரிவிக்கும் இரு தரப்பினரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு திரும்பப் பெறும்போது பாா்த்துக் கொள்ளலாம் என ஏற்படுவதும் வழக்கமான ஒன்றுதான் என அரசியல் பாா்வையாளா்கள் கூறுகின்றனா்.அதனால்தான் நேரடி அரசியல் போட்டியுள்ள ஒன்றியக் குழு உறுப்பினா் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கான வேட்புமனுக்கள் வெகுவாகக் குறைந்து காணப்படுகின்றன.

தற்போது வரும் திங்கள்கிழமை டிச. 16 மாலை வரை வேட்புமனுக்கள் அளிக்கலாம் என்ற நிலையில் கட்சியில் விருப்பம் தெரிவித்துள்ள பலரும் வேட்புமனுக்களுக்கான ஆவணங்களையும் தயாா் நிலையில் வைத்துள்ளனா்.

அநேகமாக வெள்ளிக்கிழமை மாலைக்குள் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்படையும் எனத் தெரிகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments