கோபாலப்பட்டிணம் 6-வது மற்றும் 7-வது வார்டை சேர்ந்த மக்கள் 3.கிமீ தூரம் சென்று ஆர்.புதுப்பட்டினத்தில் வாக்களிக்கும் அவலநிலை..!கோபாலப்பட்டிணம் 6-வது மற்றும் 7-வது வார்டை சேர்ந்த மக்கள் 3.கிமீ தூரம் சென்று வாக்களிக்கும் அவலநிலை.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள நாட்டாணி புரசக்குடி ஊராட்சி உள்ளது. இங்கு சுமார் 2011-ஆம் ஆண்டு கணக்கின் படி கோபாலப்பட்டிணத்தில் 3000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 2006-ஆம் ஆண்டு தேர்தலில் இந்த ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணம் கிராமத்தை சேர்ந்தவர்களில் 6-வது வார்டில் உள்ள 484 வாக்காளர்களில் 83 வாக்காளர்கள் மட்டும் அருகில் உள்ள ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்து வந்தனர்.

அடுத்து 2011 -ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் 6-வது வார்டில் உள்ள 83 வாக்காளர்களுடன் 401 வாக்காளர்களையும் சேர்த்து மொத்தம் உள்ள 484 வாக்காளர்களையும் ஆர்.புதுப்பட்டினத்தில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க மாற்றம் செய்து பட்டியல் வெளியிடப்பட்டது. 6-வது வார்டில் உள்ள 401 வாக்காளர்களில் பெரும்பாலோனோர் முஸ்லிம் பெண்கள், முதியவர்கள். இவர்கள் அனைவரும் 3கி.மீ. தூரம் உள்ள ஆர்.புதுப்பட்டினம் சென்று வாக்களிப்பது என்பது முடியாத காரியம். எனவே, 6வது வார்டை சேர்ந்த அனைவரும் கோபாலப்பட்டினத்திலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலை கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பது என முடிவு எடுத்து அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


தற்பொழுது 2019-ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியலில் கோபாலப்பட்டிணம் 6-வது வார்டு மற்றும் 7-வது வார்டு என்று இரண்டு வார்டுகளில் உள்ள கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த சுமார் 1114 வாக்காளர்கள் சுமார் 3கி.மீ தூரம் உள்ள ஆர்.புதுப்பட்டினம் சென்று வாக்களிக்கும் படி வெளியிடப்பட்டுள்ளது.


கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த அப்துல் சுக்கூர் அவர்கள் கூறுகையில் வாக்குச்சாவடி மாற்றப்பட்டது சம்மந்தமாக 6-வது மற்றும் 7-வது வார்டை சேர்ந்த பெரும்பாலான வாக்காளர்கள் தெரியாமல் உள்ளனர். மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் பெயர்கள் வெவ்வேறு ஊர்களில் உள்ள வார்டுகளில் சேர்க்கப்பட்டு குளறுபடியினை ஏற்படுத்தியும் உள்ளது. மேலும் வாக்குசாவடியை கோபாலப்பட்டிணத்தில் அமைத்து தரவேண்டி கோபாலப்பட்டிணம்  ஜமாத்தார்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே சரியான தீர்வு எட்டப்படும் என்றும், மேலும் இது போன்று ஒவ்வொரு தடவையும் வாய் மூடி மவுனமாக இருந்தால் இனி வரக்கூடிய தேர்தல்களில் கோபாலப்பட்டிணம் மக்கள் அனைவரும் வெளியூர் சென்று வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர் பட்டியல் மறு வரையறை செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என இவ்வாறாக கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments