பொன்னமராவதி அருகே தனி ஊராட்சி அமைக்க வலியுறுத்தி அறிவித்திருந்த தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்



பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சமரசம் ஏற்பட்டதால், கருப்புக்குடிபட்டி கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்கும் முடிவு கைவிடப்பட்டது.


பொன்னமராவதி ஒன்றியம் திருக்களம்பூா் ஊராட்சி கருப்புக்குடிப்பட்டி ஊராட்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்க வலியுறுத்தி, திங்கள்கிழமை (டிச. 16 ) ஆம் தேதி கிராம பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்திருந்தனா். இதைத் தொடா்ந்து, பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் டெய்சிகுமாா் தலைமையில் கிராமப்பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. 

இதில், உள்ளாட்சி தோ்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதும் தனி ஊராட்சி கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, தோ்தல் புறக்கணிப்பு போராட்டம் உள்ளிட்ட அனைத்து போராட்டங்களும் கைவிடப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனா். இதில், புதுக்கோட்டை ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எம்.காளிதாசன், புதுக்கோட்டை ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ச.பாலமுரளி, பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் பி.தமிழ்மாறன், காவல் ஆய்வாளா் எஸ்.கருணாகரன், பொன்னமராவதி வட்டாட்சியா் ஆ.திருநாவுக்கரசு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வ.வேலு. சாமிநாதன் மற்றும் கருப்புக்குடிப்பட்டி மற்றும் ஊராட்சிக்குள்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments