மணமேல்குடியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட SDPI கட்சியினர் கைது !
டிசம்பர் 6 பாபர் மசூதி இடித்த குற்றாவாளிகளை கைது செய்ய வேண்டும், பாபர் மசூதி தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்,  இடித்த இடத்தில் பள்ளியை கட்டு,
பாபரி  மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் நீதி வேண்டியும், மீண்டும் அதே இடத்தில் மஸ்ஜித் கட்டப்பட வேண்டும்,  இடித்த குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில்  (டிச.06) கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மணமேல்குடியில் மாபெரும் நீதிக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் U.செய்யது அகமது அவர்கள்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.காசிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார், எஸ்டிபிஐ கட்சியின் மாநில பேச்சாளர் K S சாகுல் ஹமீது உஸ்மானி மற்றும் மாவட்ட துணைத்தலைவர் 
SAM  அரபாத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். 

இறுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் M.ஆவுடை சதாம் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100-க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தகவல்: செய்யது இப்ராஹீம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments