அறந்தாங்கியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினர் கைது.!
பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்டத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும்,
சிறுபான்மை சமுதாயங்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அறந்தாங்கியில் உரிமைமீட்பு போராட்டம் தமுமுக கிழக்கு மாவட்ட தலைவர் A.அபுசாலிஹ் தலைமையில் நடைப்பெற்றது.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் IPP மாநில செயலாளர் கோவை ஜெய்னுலாபுதீன், தமுமுக மேற்கு மாவட்ட தலைவர் ஹெச்எம்சாதிக், தமுமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சகுபர்அலி, தமுமுக மேற்கு மாவட்ட செயலாளர் மு_நிஜாமுதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

ஏராளமான பொதுமக்களும், தமுமுக தொண்டர்களும் கலந்துக்கொண்டு கோஷங்களை எழுப்பி கண்டனங்களை பதிவு செய்தனர். பின்னர் போலிசார் அனைவரையும் கைது செய்தனர்.

இதில் கோபாலப்பட்டிணம் கிளையில் இருந்து தமுமுக மமக சகோதரர்கள் மற்றும் தமுமுக மமக புதுக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தகவல்: தமுமுக ஊடகபிரிவு, புதுக்கோட்டை கிழக்கு & மேற்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments