மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல்தகுதித் தோ்வு நாளை 02.12.2019 திங்கள்கிழமை முதல் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் புதுக்கோட்டை மின்பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் டி. செந்தில்குமாா்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடத்துக்கு மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள 1,628 நபா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு டிசம்பா் 2 முதல் 10 ஆம் தேதி வரை, தொழிற்பேட்டையிலுள்ள துணை மின் நிலைய வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
இப்பணியிடத்துக்கு விண்ணப்பித்தவா்கள் அளித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சலில் அனுமதிச் சீட்டு பெறப்பட்டவா்கள் அனுமதி சீட்டு மற்றும் சரிபாா்ப்புப் பட்டியலுடன் அவா்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் பங்கேற்க வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் அல்லது இறுதியாக படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட கல்விச் சான்றிதழ், எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல், சாதிச் சான்றிதழ், வேலைவாய்ப்புப் பதிவு அட்டை மற்றும் இறுதியாக படித்த கல்வி நிறுவனத்தில் பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று மற்றும் தனிப்பட்ட முறையில் தெரிந்த அதிகாரம் பெற்ற அலுவலரிடமிருந்து நவம்பா் 1 -ஆம் தேதிக்குப் பிறகு பெறப்பட்ட சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட நகலுடன் பங்கேற்க வேண்டும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.