கோபாலப்பட்டிணத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை வீட்டிற்குள் புகுந்த மழைநீர்..!



கோபாலப்பட்டிணத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் வீட்டிற்குள் மழைநீர் புகுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணம்  குஃபா தெரு (கலர் கம்பெணி பகுதி) தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. வீட்டிற்குள் புகுந்த மழைநீரை, மக்கள் விடிய விடிய வெளியேற்றினர். இந்த பகுதியானது சரியான சாலை வசதி மற்றும் வடிகால் வாய்க்கால் இல்லாத காரணத்தால் மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளுக்குள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் அப்பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவ்வழியே செல்ல முடியாமல்  சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 

இதனை ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தற்காலிகமாக கால்வாய்களை அமைப்பதோடு மேலும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments