புதுக்கோட்டையில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..! இந்தியாவை ஜெர்மனியாக்க பார்க்கிறார்கள் என ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..!



இந்தியாவை ஜெர்மன் போன்று மாற்ற நினைக்கிறது ஒரு கூட்டம், இந்த சர்வாதிகார போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.


தமிழகத்தில் ஒரு கேவலமான அரசு நடைபெற்று வருகிறது, அதிமுகவில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் 11 பேர் மனசாட்சி இல்லாமல் பாஜகவோடு ஒடுகின்றனர், அவர்கள் எதிர்த்து ஓட்டு போட்டு இருந்தால் குடியுரிமை சட்டம் நிறைவேறாமல் இருந்திருக்கும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் 11 பேர் செய்தது வரலாற்றுத் துரோகம் அந்த துரோகத்தை ஒருபோதும் யாரும் மறக்கக்கூடாது, இந்த வரலாற்றுத் துரோகத்தை நிதிஷ்குமாரும் செய்தார். தற்போது அதை அவர் மனசாட்சி உறுத்தியதால் மறுபரிசீலனை செய்து உள்ளார்.


அதிமுகவிற்கு மனசாட்சி உறுத்தவில்லை மனசாட்சி இருந்தால் தானே உறுத்தும் மனசாட்சி இருந்தால் தானே மறுபரிசீலனை செய்யும், தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தை பார்த்தாவது அதிமுக மனசாட்சி உறுத்தும் என நம்புகிறேன் என்று புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அனைத்து ஜமாத் உலமாக்கள் சபை ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.


குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் இஸ்லாமிய அமைப்புக்கள் மற்றும் ஜமாத் கமிட்டி உலமாக்கள் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ப. சிதம்பரம் பேசுகையில்:

இந்தியாவில் 40 ஆண்டுகாலம் இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளது, நான் பட்டியலிட்ட எந்த ஒரு பிரச்சனைக்கும் பாஜக தீர்வு காணவில்லை, அதற்கு பதிலாக முத்தலாக் பிரச்சனையை கையில் எடுத்து மிருக பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது, அதற்க்கு அப்புறம் காஷ்மீர் அசாம் மாநில பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் பாஜக கையிலெடுத்து மக்கள் மீது தொடர்ச்சியாக சம்மட்டியால் அடிப்பதுபோல் அடித்தது, தற்போது நான்காவது சம்மட்டி அடியாக குடியுரிமை சட்டத்தை கையிலெடுத்துள்ளது, காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள ஒரு சமுதாய மக்கள் மீது விழுந்த சம்மட்டி அடியை எதிர்த்து பலமுறை குரல் கொடுத்தது, தற்போது நடைபெறும் போராட்டம் இந்திய இறையாண்மைக்கும் அரசுக்கும் உடனான போராட்டம், இந்திய சமுதாயத்திற்கும் அரசுக்கும் உண்டான போராட்டம், இந்திய அரசியல் சாசன சட்டத்தை பாதுகாத்ததால் இஸ்லாமியர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், நாட்டில் வாழும் ஒருவன் குடிமகன் இல்லை என்றால் அரசுதான் நிரூபிக்க வேண்டும் அதை மக்கள் நிரூபிக்க மாட்டார்கள் குடிமகன் என்பதற்கு நிலத்தில் வாழ்வதே சாட்சி, இந்திய நாட்டை ஜெர்மன் நாடாக மாற்ற ஒரு கூட்டம் கையில் எடுத்துள்ளது அதை நாம் தடுக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்.


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாத் கமிட்டி உலமாக்கள் பேரவை சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து குடும்பம், குடும்பமாய் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்ட மசோதா சிறுபான்மையினருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் மத்திய அரசு துரோகம் விளைவிக்கக் கூடிய அளவில் இந்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளதாகவும் இந்த சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், நவாஸ்கனி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ரகுபதி, மெய்யநாதன், பெரியண்ணன்அரசு உள்ளிட்டோரும் அதிமுக, பாஜக தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். புதுக்கோட்டையை போல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் காட்டுத்தீயை போல் பரவி வருகிறது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments