புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை குறைகேட்புக் கூட்டங்கள் ரத்து..



உள்ளாட்சித் தோ்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படும் வரை, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து விதமான குறைகேட்புக் கூட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக ஆட்சியா் பி.உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.


உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு திங்கள்கிழமை காலை வெளியானது. இதனால் நடத்தை விதிகளும் உடனே அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வழக்கமாக நடைபெறும் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டது.

வாராந்திர மக்கள் குறைகேட்புக் கூட்டம், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் குறை கேட்புக் கூட்டம் ஆகிய அனைத்துக் குறைகேட்புக் கூட்டங்களும் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை ரத்து செய்யப்படுவதாகவும், மக்கள் ஏதேனும் பிரச்னைகளை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வர எண்ணினால் அந்த மனுக்களை பெட்டியில் போடலாம் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.

இதன் காரணமாக, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பொதுமக்கள் பலரும், அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் மனுக்களை போட்டுச் சென்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments