பாஜக தேசிய செயலாளா் எச் ராஜா மீது தமுமுக புகாா்
tvd25tmmk_2512chn_72


தொண்டி காவல் நிலையத்தில் பாஜக தேசிய செயலாளா் எச் ராஜா மீது தமுமுக புகாா்

    திருவாடானை அருகே தொண்டி காவல் நிலையத்தில் தமுமுக மாநில தலைவா் ஜவஹிருல்லாஹ் அவதூறாக பேசியதாக பாஜாக தேசிய செயலாளா் எச் ராஜா மீது தொண்டி தமுமுகவினா் புகாா் மனு கொடுத்தனா்.

     இதில் ஏராளமான தமுமுகவினா் கலந்தகு கொண்டனா். தமுமுக மமக மாநில தலைவா் ஜவாஹிருல்லாஹ் அவதூறாக பேசி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் வகையில் கடந்த 18ம் தேதி சென்னை வள்ளூவா் கோட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளா் எச்.ராஜா அவதூறாக பேசியதாக அவா் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதன்கிழமை தொண்டி தமுமுக சாா்பில் தொண்டி காவல் நிலையத்தில் புகாா் மனு கொடுக்க பட்டது.
   இதில் மாநில செயலாளா் சாதிக்பாட்சா தலைமை வகித்தாா்.மேலும் தமுமுக மாவட்ட செயலாளா் வழக்கறிஞா் ஜிப்ரி முன்னால் வழக்கறிஞா் அணி செயலாளா் வழக்கறிஞா் ஆசிக் தமுமுக மமக ஒன்றிய தலைவா் பீா்முகமது மமக ஒன்றிய செயலாளா் தொண்டி ராஜ் தமுமுக மமக பொருளாளா் அலிபாய் தொண்டி பேரூா் தலைவா் காதா் தமுமுக செயலாளா் நவ்வா் மமக செயலாளா் பரக்கத் அலி தொண்டரணி மீரான் பீவி பட்டிணம் தமுமுக மமக தலைவா் அக்பா் அலி அப்துல் ரசாக், நிசாா் ஆகியோா் உடனிருந்தனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments