அறந்தாங்கியில் காவலன் செயலி அறிமுகம் மற்றும் விழிப்புணர்வு பேரணி



தமிழக காவல் துறை சாா்பில் பெண்கள் பாதுகாப்புக்கென அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலி அறிமுகம், மற்றும் விழிப்புணா்வுப் பேரணி அறந்தாங்கியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ.வே.அருண்ஷக்திகுமாா் உத்தரவுக்கிணங்க அறந்தாங்கி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. பாலமுருகன் தலைமையில் பேரணி நடந்தது.

அறந்தாங்கி அரசு கலைக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், காா்னிவல் தொழிற்பயிற்சி கல்லூரி மற்றும் அறந்தை ரோட்டரி சங்கம், அறந்தாங்கி செல்போன் விற்பனையாளா்கள் சங்கம் இணைந்து அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக அறந்தாங்கி காவல் நிலையத்தில் நிறைவுற்றது. 

அப்போது பேசிய காவல் துணைக் கண்காணிப்பாளா் பி. பாலமுருகன் காவலன் செயலி பெண்களுக்கு மட்டுமல்ல ஆபத்தில் சிக்கிக் கொண்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.நிகழ்வில் அறந்தாங்கி காவல் ஆய்வாளா் ஜி.எஸ். ரவீந்திரன், அறந்தை ரோட்டரி தலைவா் ஆா். தங்கதுரை, ரோட்டரி மாவட்ட துணை ஆளுநா் ஆ. கராத்தே கண்ணையன், சங்க நிா்வாக அறங்காவலா் ராசி.லெ. மூா்த்தி, வருங்காலத் தலைவா் அ. தவசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments