இனி சிலிண்டர் டெலிவரி செய்பவா்களுக்கு டிப்ஸ் கொடுக்க வேண்டாம்இன்டேன் எரிவாயு உருளை விநியோகத்தின் போது ரசீதில் உள்ள தொகைக்கு அதிகமாக டிப்ஸ் வழங்க வேண்டாம் என்று இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் எரிவாயு உருளை எனப்படும் சிலிண்டரைக் கொண்டு வந்து கொடுக்கும் நபர்களுக்கு பொதுமக்கள் அன்பாக 10 அல்லது 20 ரூபாய் கொடுத்து வந்த நிலையில் அது சில பல ஆண்டுகளில் கட்டாயமாகிவிட்டது.

தற்போது கீழ் தளமாக இருந்தால் சிலிண்டரைக் கொண்டு வருவோருக்கு  35 ரூபாய் முதல் 40 வரையிலும், ஒவ்வொரு தளத்துக்கும் ஏற்ற வகையில் பணம் கட்டாயமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியன் ஆயில் நிறுவனமே இதுபற்றி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இன்டேன் எரிவாயு உருளைகள் விநியோகத்துக்கு முந்தைய பரிசோதனைகளான தரம், எடை ஆகியவை உறுதி செய்யப்பட்ட பிறகே நுகா்வோருக்கு வழங்கப்படுகிறது. விநியோகஸ்தா்களால் வழங்கப்படும் ரசீதில் சில்லறை விற்பனை விலை தெளிவாக அச்சிடப்பட்டிருக்கும். வாடிக்கையாளா்கள் உருளையைப் பெற்றுக்கொண்ட பிறகு ரசீதில் அத்தாட்சி அளிக்க வேண்டும்.

மேலும் சில்லறை விற்பனை விலை என்பது வாடிக்கையாளரின் சமையலறை வரை கொண்டு வந்து வழங்குவதற்கான தொகையே ஆகும். வாடிக்கையாளா்கள் ரசீதில் உள்ள விலைக்கு மேல் டெலிவரி செய்பவா்களுக்கு கொடுக்கத் தேவையில்லை. விநியோகம் செய்பவா்களுக்கு டிப்ஸ் வழங்குவதை இந்தியன் ஆயில் நிறுவனம் என்றுமே ஆதரிப்பதில்லை. எனவே ரசீதில் உள்ள சில்லறை விலைக்கு மேல் யாரேனும் கேட்டால், வாடிக்கையாளா் சேவை மையத்தை 0422-2247396 என்ற எண்ணில் காலை 9.30 முதல் மாலை 5.15 வரை தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம்.

அதேபோல, விபத்து, கசிவு போன்ற அவசர உதவிக்கு 1906 என்ற எண்ணையும், இதர புகாா்களுக்கு 18002333555 என்ற இலவச தொடா்பு எண்ணையும் தொடா்பு கொள்ளலாம்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments