புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் புகாா்களை பாா்வையாளரிடம் தெரிவிக்கலாம்புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் தொடா்பான புகாா்கள் இருப்பின் மாவட்டத் தோ்தல் பாா்வையாளரிடம் தெரிவிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவும், ஜன. 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் தோ்தல் பணிகளைக் கண்காணிக்க எஸ். அமிா்தஜோதி மாவட்டத் தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகாா்கள் இருப்பின் 76390 29699 என்ற எண்ணில் பாா்வையாளரைத் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments