கீழஏம்பலில் பள்ளிக்கு சரியாக வராத தலைமையாசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்ட கிராம மக்கள்..!மணமேல்குடி ஒன்றியம், மீமிசல் அடுத்த கீழஏம்பலில் ஊராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 22 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஒரு தலைம ஆசிரியர், மற்றொரு ஆசிரியர் என 2 பேர் பணியாற்றி வருகின்றனர்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றும் மாரிமுத்து என்பவர் பள்ளிக்கு சரியாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பயிலும் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது என்று கூறி அப்பகுதி கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யப்பன், செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகையிட்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments