புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கோபாலப்பட்டிணம் அரஃபா தெரு கறிக்கடை அருகில் இருந்த ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் பழைய ஓட்டு கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்டு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நேற்று 04.12.2019 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் ஆலிம்கள் தூஆ ஓதி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ரஹ்மானியா பெண்கள் மதரஸாவின் புதிய கட்டிடத்தை மண்ணின் மைந்தர் மர்ஹூம் ஜனாப் மு.மு.நசுருதீன் அவர்களின் மகனார் ஜனாப். மு.மு.ஜாபர் சாதிக் அவர்கள் சொந்த செலவில் கட்டிக்கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கோபால்பட்டிணம் ஆலிம்கள், பொதுமக்கள், பொதுநல அமைப்பு சகோதரர்கள், ஊர் ஜமாத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிஸ்கோத்து மற்றும் தேநீர் பரிமாறப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.