வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஜனவரி மாதம் சிறப்பு முகாம்வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஜனவரி மாதம் சிறப்பு முகாம்!
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய ஜனவரி மாதம் 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தங்களுடைய பெயர், பிறந்த தேதி , முகவரி ஆகிய மாற்றங்களை ஜனவரி மாதம் நடைபெறும் சிறப்பு முகாம் மூலம் திருத்தம் மேற்கொள்ளலாம்.

அதே போல புதிய வாக்காளர்கள் பார்ம் 6 என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். வாக்குச்சாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆன்லைன் மூலம் புதிய பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய விரும்புவோர் www.nsvp.in என்ற இணையதளம் மூலமும் அதோடு Voters Help line என்ற ஆப் மூலம்  உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பிக்கலாம், இந்த சிறப்பு முகாமிற்கு பிறகு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments