அறந்தாங்கி பகுதியில் போலி மதுபான விற்பனை.! அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்..!



அறந்தாங்கி பகுதியில் மதுபான பார்கள் சிலவற்றில் விற்பனை செய்யப்படும் புகையிலை பொருள்களை ஊறவைத்து தயாரிக்கப்படும் மதுபானங்களை அருந்துவதால், இப்பகுதியில் இளம் வயது மரணங்கள் அதிகரித்துள்ளன. எனவே மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தமிழகத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பீர், பிராந்தி, ரம், விஸ்கி, ஓட்கா போன்ற வெளிநாட்டு மதுபானங்களை தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டாஸ்மாக் மதுக்கடைகளையொட்டி, மது அருந்தும் கூடங்களை (பார்) தனி நபர்கள் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகின்றனர்.

அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் மதுபான கடைகளுடன் இணைந்துள்ள மது அருந்தும் கூடங்களில் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்கள் உள்பட 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை நடந்து வருகிறது. பெரும்பாலும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்துள்ள நேரம் தவிர மற்ற நேரங்களில் பெரும்பாலான மது அருந்தும் கூடங்களில் சட்ட விதிகளை மீறி, புதுச்சேரி மாநில மதுபானம், புகையிலை, ஹான்ஸ் போன்றவற்றை ஊறவைத்து தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள் விற்பனை நடந்து வருகின்றன.

மது பிரியர்கள் வாங்கும் மதுபானம் போலி என்பதே தெரியாமல் பலரும் மது அருந்தி வருகின்றனர். இதுபோன்ற புகையிலை பொருள்களால் விதிகளை மீறி தயாரிக்கப்படும் போலி மதுபானங்களில் அதிக போதை இருக்கும் என்பதாலும், எந்த நேரமும் மது அருந்தும் கூடங்களில் இந்த மதுபானம் கிடைக்கும் என்பதாலும், மதுப்பிரியர்கள் தாங்கள் அருந்தும் மதுபானம் ஒரிஜினல்தானே என்று கேட்காமல் மதுவை அருந்தி வருகின்றனர். இதுபோன்று புகையிலை பொருள்களால் தயாரிக்கப்படும் அதிக போதையுள்ள மதுவை அருந்துவதால், அறந்தாங்கி பகுதிக்குள் 50 வயதிற்குள் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அறந்தாங்கி பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனையை தடுப்பதோடு, மது அருந்தும் கூடங்களை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, விதிகளை மீறும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறந்தாங்கி பகுதியில் விதிகளை மீறி செயல்படும் மது அருந்தும் கூடங்களை மூடவும் மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Source: தினகரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments