கோபாலப்பட்டிணம் கடற்கரையை சோலைவனமாக மாற்றிய மண்ணின் மைந்தர்கள்...




கோபாலப்பட்டிணம் கடற்கரையில் மரங்களை வளர்த்து சோலைவனமாக மாற்றி சாதித்த மண்ணின் மைந்தர்கள்.


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் கடற்கரையில் நிழல் தரும் வகையில் மரங்களை வளர்ப்பதற்கு சில மண்ணின் மைந்தர்கள் முடிவு செய்தனர். அதன் காரணமாக கடந்த 14.12.2016 அன்று வேப்ப மரம், ஆலமரம், புங்கை மரம், தென்னை மரம் போன்ற மரங்களை மண்ணின் மைந்தர்கள் நட்டனர். அதன்பிறகு அதனை அப்படியே விட்டுவிடாமல் தொடர்ந்து அதற்கு தினமும் தண்ணீர் விட்டு வளர்த்து வந்தனர். அதன் பலனாக இன்று அவை நல்ல முறையில் வளர்ந்து நல்ல காற்று மற்றும் நிழல் தரக்கூடிய வகையில் அமைத்துள்ளது.


கோபாலப்பட்டிணம் மக்கள் கடற்கரையில் மீன் வாங்குவதற்காகவும் மற்றும் ஒரு சிலர் காற்று வாங்குவதற்காகவும் வந்து அமருவார்கள். அப்போது கடற்கரையில் இருந்த கருவேல மரங்களின் நிழலில் அமர்ந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நிலத்தடி நீருக்கு கேடுவிளைவிக்கும் வகையில் இருந்த கருவேல மரங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டது. எனவே இப்பொழுது வளர்க்கப்பட்டுள்ள வேப்ப மரம் மற்றும் ஆலமரம் அங்கு சென்று காற்று வாங்கக்கூடிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைத்துள்ளது.


எனவே இந்த மரம் வளர்க்கும் முயற்சியை மேற்கொண்ட மண்ணின் மைந்தர்கள், செடி மற்றும் சுற்று வேலி அமைக்க பொருளாதார உதவி புரிந்த நபர்கள் மற்றும் அன்று முதல் இன்று வரை செடிகள் வளர முழு உடல் உழைப்பு மற்றும் இரத்தம் சிந்திய குறிப்பிடத்தக்க சில மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் GPM மீடியாவின் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதில் பெயர்கள் குறிப்பிடப்படாதற்கு காரணம் ஒரு சிலரின் பெயர்கள் விடுபட்டால் மனவருத்தத்தை ஏற்படுத்தும் என்பதற்காக இங்கு குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் கோபாலப்பட்டிணத்தில் இது போன்ற பொது இடங்களில் செடிகளை நட்டு இன்று வரை பொது நல அமைப்புகள் பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோபாலப்பட்டிணத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் பொதுநல அமைப்புகள் நமதூரில் உள்ள குளங்களை சுற்றி பனை விதை மற்றும் பயனுள்ள மரங்கள் நடுவது, மீமிசலில் இருந்து நம்ம ஊருக்கு வரும் வழி முழுவதும் சாலை ஓரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பட வேண்டும் என்பது கோபாலப்பட்டிணம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே இந்த திட்டத்தை கையில் எடுத்து கோபாலப்பட்டிணத்தை விரைவில் சோலைவனமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்போம்.....

மரம் வளர்ப்பு பற்றி  நபி மொழி:

முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 2320, அனஸ் இப்னு மாலிக் (ரலி).











புகைப்படம் உதவி: அப்துல்லா
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments