டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசை விமர்சித்து நடிகர் சித்தார்த் ட்விட்



டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசை விமர்சித்து நடிகர் சித்தார்த் ட்விட் செய்து உள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட சென்னை பெருவெள்ளம் தொடங்கி, பல்வேறு சமூக பிரச்சினைகளில் தன்னுடைய கருத்தை சமூகவலைதளங்களில் தெரிவித்து வருபவர் நடிகர் சித்தார்த். அவ்வப்போது மத்திய, மாநில அரசுகளின் தவறான முடிவுகளையும் சுட்டிக் காட்டத் தவறுவதில்லை.

அந்த வகையில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகவும், டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மத்திய அரசை விமர்சித்து நடிகர் சித்தார்த் ட்விட் செய்து உள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது அப்போது போலீசார் தடியடி நடத்தி மாணவர்கள் கூட்டத்தை கலைக்க முயன்றதால் போராட்டம் வெடித்தது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, இரண்டு பேருந்துகளுக்கும் தீ வைக்கப்பட்டன. மேலும், இரண்டு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க பல்கலைக்கழக வளாகத்திற்குள் தஞ்சம் புகுந்த போராட்டக்கார்களும் கைது செய்யப்பட்டனர். அப்போது, போராட்டக்கார்களுடன் சேர்ந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த மாணவர்களையும் போலீசார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வகுப்பறைகளை போலீசார் சேதப்படுத்திவிட்டதாக மாணவர்கள் வீடியோ வெளியிட்டனர்.

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசை விமர்சித்து  நடிகர் சித்தார்த் ட்விட் செய்து உள்ளார். அவர் தனது டுவிட்டரில், 

"அவர்கள் இருவரும் கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனன் அல்ல, சகுனி மற்றும் துரியோதனன்." டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் என  டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மத்திய அரசை விமர்சித்து நடிகர் சித்தார்த் ட்விட் செய்து உள்ளார்.

"These two are not Krishna and Arjuna. They are Shakuni and Duryodhana."

Stop attacking #universities! Stop assaulting #students! #JamiaMilia#JamiaProtest
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments