காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கேரளா மாணவர்கள் வெற்றுடம்பில் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக வாசகங்கள்...!சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கா்நாடகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 35வது கலை விழாப் போட்டிகள் இன்று தொடங்கியது.


வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள இக்கலைவிழாவில் 35 பல்கலைக்கழகங்களிலிருந்து ஏறக்குறைய 1300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பரதம், குழுப் பாடல்கள், பேச்சுப் போட்டிகள், நாடகம் போன்றவற்றில் கலந்து கொண்டனர்.இந்நிலையில் புதன் அன்று மதியம் 12 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன் துவங்கிய கலை பேரணியில் தென்னிந்தியாவிலுள்ள முக்கிய 5 பல்கலைக்கழகங்களின் மாணக்கர்கள் தங்களது மாநில கலாசாரம், பாரம்பரியத்தை குறிக்கின்ற வகையில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த கலை பேரணியில்,கேரள மாநிலம் காலடியை சேர்ந்த ஸ்ரீ சங்கரச்சார்ய பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது வெற்றுடம்பில்  RESIST CAA, REJECT NRC என எழுதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தங்களது நிலைபாட்டை வெளிப்படுத்தினர்.  

Source: நக்கீரன்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments