புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் மகிழ்ச்சி ஆடையகத்தில் 5,10,20 மற்றும் 25 பைசாவிற்கு சேலை விற்பனை செய்யப்பட்டது.
சமீபகாலமாக வித்தியாசமாக ஏதாவது சலுகைகளை அறிவித்து பொதுமக்களை கவர்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் திண்டுக்கல்லில் 5 பைசாவுக்கு 1/2 பிளேட் பிரியாணி கொடுத்தனர். இதனால் அந்த கடைக்குமுன் ஏராளமான மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கி சென்றனர்.
இந்தநிலையில் நேற்று மீமிசலில் உள்ள மகிழ்ச்சி ஆடையகத்தின் உரிமையாளர் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு அதற்கு விளம்பரம் செய்வது போல 5,10,20,25 பைசா கொடுத்து சேலை வாங்கி செல்லலாம் என்று அறிவித்தார். இதைத்தொடர்ந்து கடைமுன் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
பழைய 5,10,20 மற்றும் 25 பைசா நாணயங்களுடன் ஏராளமானோர் கடை முன்பு திரண்டனர். அதில் முதலில் வந்த 200 பேருக்கு மட்டும் ரூ.250 மதிப்புள்ள சேலை வழங்கினர்.
இது பற்றி கடை உரிமையாளர் கூறுகையில் எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதீர் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே இந்த 5,10,20 மற்றும் 25 பைசாவிற்கு சேலை வழங்கினேன் என இவ்வாறாக கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments