நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் காப்பாற்றுங்கள்! - டெல்லி ஜேஎம்இ பல்கலைக்கழக மாணவர்கள் கதறல்




டெல்லி ஜேஎம்இ பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த போலீஸார் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

மேற்கு வங்கத்தலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேற்குவங்கத்தில் போராட்டக்காரர்களால் ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலையில் 15 பேருந்துகள் கொளுத்தப்பட்டன. டெல்லியில் உள்ள ஜேஎம்இ (Jamia Millia Islamia) பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கவுகாத்தியில் இன்று போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேலும் இருவர் பலியாகினர். இந்தப் போராட்டத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் இதுவரை 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா (Jamia Millia Islamia)பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காவல்துறையினர் மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.தி குயிண்ட் வெளியிட்டுள்ள வீடியோவில், காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தனர். பல்கலைக்கழக நுழைவு வாயிலைப் பூட்டிவிட்டு மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். போலீஸாரின் கண்களில்படாமல் இருக்க பல்கலைக்கழக வளாகத்துக்குள் இருந்த விளக்குகளை அனைத்துவிட்டோம்.

நாங்கள் விடுதியில் இருக்கிறோம். போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்துவதை கேட்க முடிகிறது. நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் எங்களை காப்பாற்றுங்கள் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த வாசீம் அஹமது கான் பேசுகையில் காவல்துறையினர் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய எந்த அனுமதியும் வழங்கவில்லை. கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துக்கின்றனர். பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேற நிர்பந்திக்கின்றனர்  என்றார்.பல்கலைக்கழகத்துக்குள் போலீஸார் நுழைந்ததையடுத்து செய்தியாளர்கள் அங்கு விரைந்தனர். அவர்களிடம் போலீஸார் கடுமையாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.



இதுகுறித்து பேசிய செய்தியாளர் புஷ்ரா ஷேக் பிசிசிக்கு செய்தி சேகரிப்பதற்காக இங்கு வந்தேன். போலீஸார் என்னுடைய மொபைல்போனை பிடுங்கி உடைத்துவிட்டனர். ஆண் காவலர் ஒருவர் என்னுடைய தலைமுடியைப் பிடித்து இழுக்கிறார். என்னுடைய போனைக் கேட்டதற்கு லத்தியைக் கொண்டு என்னை அடிக்கிறார். என்னிடம் தவறாக நடக்கிறார்கள். நான் இங்கு வேடிக்கைக்காக வரவில்லை. இங்கு நடப்பதை காட்சிப்படுத்துவதற்காக வந்துள்ளேன் என ஆத்திரத்துடன் கூறினார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments