புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

 பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமை வகித்தார்.

திமுக நகரச் செயலாளர் அழகப்பன், காங்கிரஸ் நகரத் தலைவர் பழனியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு உறுப்பினர் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதாப்சிங், மதிமுக நகரச் செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில துணைத் தலைவர் முத்துநிலவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ஏனாதி ராசு, ஒன்றியச் செயலாளர் செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவானந்தம், வட்டாரக் காங்கிரஸ் தலைவர் செல்வராஜ், திமுக மாவட்டப் பிரதிநிதி சிக்கந்தர், விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணின், மலைதேவேந்திரன், திமுக மாவட்ட இளைஞரணி மனோகரன், மாணவர் இளைஞர் கூட்டமைப்பு ஹைதர்அலி, மனிதநேய மக்கள் கட்சி நிஜாமுதீன் மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், ஜாமத்தார்கள்  உள்பட பலர் கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை விளக்கிப் பேசினர். முன்னதாக புதுவளவில் இருந்து குடியுரிமை சட்டத்தை நீக்க கோரி கோஷங்களுடன் பேரணியாகச் சென்று பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments