நாட்டாணிபுரசகுடி ஊராட்சி ஒரு சிறப்பு பார்வை..!



புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோயில் வட்டாரத்தில் நட்டாணிபுரசகுடி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 

கடந்த 06.10.2019 தேதி வெளியிடப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7992 ஆகும். இவர்களில் பெண்கள் 3995 பேரும் ஆண்கள் 3997 பேரும் உள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு தேர்தல் வரை கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு பொது பிரிவில் இருந்து வந்தது. ஆனால் இந்த முறை கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கான இடஒதுக்கீடு SC பெண்கள் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி, மொத்தம் 12 வார்டுகளை கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்படும் 12 ஊராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு ஒரு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனவே ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கடும் போட்டி நிலவும்.

வார்டு இடஒதுக்கீடு விபரம்:

1-வது மற்றும் 2-வது வார்டு பொது பிரிவாக ஒதுக்கப்பட்டுள்ளது.
3,4,5,6,7,8,9,10,11 மற்றும் 12-வது வார்டு ஆகியவை பொது மற்றும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் பிரிக்கப்பட்டுள்ள வார்டு விபரம்:

நட்டாணிபுரசகுடி ஊராட்சியை சேர்ந்த வாக்காளர்கள் 4 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். அதாவது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியை சேர்ந்த ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிற மூன்று கவுன்சிலர்கள் மற்ற ஊராட்சிகளை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

1-வது வார்டை சேர்ந்தவர்கள் 11-வது வார்டில் போட்டியிடக்கூடிய கவுன்சிலருக்கு வாக்களிக்க வேண்டும்.

2-வது வார்டை சேர்ந்தவர்கள் 14-வது வார்டில் போட்டியிடக்கூடிய கவுன்சிலருக்கு வாக்களிக்க வேண்டும்.

3-வது வார்டு முதல் 10-வது வார்டு வரையில் உள்ள வாக்காளர்கள் 15-வது வார்டில் போட்டியிடக்கூடிய கவுன்சிலருக்கு வாக்களிக்க வேண்டும்.

11-வது மற்றும் 12-வது வார்டு வரையில் உள்ள வாக்காளர்கள் 13-வது வார்டில் போட்டியிடக்கூடிய கவுன்சிலருக்கு வாக்களிக்க வேண்டும்.

மாவட்ட கவுன்சிலர் வார்டு பிரிக்கப்பட்டுள்ள விபரம்:


மாவட்ட கவுன்சிலர் 22-வது வார்டில் போட்டியிடக்கூடிய வேட்பாளருக்கு வாக்கு செலுத்தும் விதமாக பிரிக்கப்பட்டுள்ளது.


பஞ்சாயத்து ராஜ் சட்டத்துக்குப் பின் 1996 முதல் 2001, 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பெயர் விபரம்:

1. ஜமாலிய பீவி, R.புதுப்பட்டிணம் (1996-2001)
2. மும்தாஜ் பேகம், கோபாலப்பட்டிணம் (வில் அம்பு) - (2001-2006)
3. J. அபுதாஹீர், கோபாலப்பட்டிணம் (விமானம்) - (2006-2011)
4. M.K.R. முஹம்மது மீராஷா, கோபாலப்பட்டிணம் (ஏணி) - (2011-2016)

குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ளதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தவும். https://wa.me/918270282723 

இந்த ஊராட்சி 12 சிற்றூர்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இதில் கோபாலப்பட்டிணத்தில் அதிகபட்சமாக சுமார் 3549 வாக்காளர்களை கொண்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 6 வார்டுகளை உள்ளடக்கியதாக கோபாலப்பட்டிணம் உள்ளது. 12 சிற்றூர்கள் பின்வருமாறு,
  1. கோபாலப்பட்டிணம்
  2. ஆர்.புதுப்பட்டிணம்(முஸ்லிம்)
  3. ஆர்.புதுப்பட்டிணம்(மீனவர்)
  4. கணபதிப்பட்டிணம்
  5. முத்துக்குடா(முஸ்லிம்)
  6. முத்துக்குடா(மீனவர்)
  7. அண்டியப்பன்காடு
  8. கூடலூர்
  9. பாதரக்குடி
  10. நாட்டாணி
  11. புரசகுடி
  12. குறிச்சிவயல்
குறிப்பு: மேலே தொகுக்கப்பட்டுள்ள குறிப்பில் தவறுகள் ஏதும் இருந்தாலோ அல்லது விடுபட்டு இருந்தாலோ எங்களுடைய GPM மீடியா வாட்ஸ்ஆப் நம்பருக்கு தெரியப்படுத்தவும். https://wa.me/918270282723

தொகுப்பு: GPM மீடியா குழு, கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments