கோபாலப்பட்டிணம் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!கோபாலப்பட்டிணம் 6-வது வார்டு மற்றும் 7-வார்டை சேர்ந்த வாக்காளர்கள் கவனத்திற்கு...


கோபாலப்பட்டிணம் 6-வது வார்டு மற்றும் 7-வார்டை சேர்ந்த சுமார் 1114 வாக்காளர்கள் R.புதுப்பட்டிணம் சென்று வாக்களிக்கும் வண்ணம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அனைவரும் கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்கும் வண்ணம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே 6-வது வார்டு மற்றும் 7-வார்டை சேர்ந்த வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாது செலுத்தும்படி GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த 17.12.2019 அன்று GPM மீடியாவில் கோபாலப்பட்டிணம் 6-வது மற்றும் 7-வது வார்டை சேர்ந்த மக்கள் 3.கிமீ தூரம் சென்று ஆர்.புதுப்பட்டினத்தில் வாக்களிக்கும் அவலநிலை..! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி செயலர் அவர்களிடம் உறுதிசெய்யப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments