மேற்கு வங்கத்தில் தொப்பி,லுங்கி அணிந்து கலவரம் ஏற்படுத்தும் பாஜகவினர்…!மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் போல் லுங்கி குல்லா அணிந்துக் கொண்டு வன்முறைக்கு சதி திட்டம் தீட்டிய 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் போது காவல்துறையால் பல இடங்களில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

மாணவர்கள் வன்முறைக்கு இஸ்லாமிய மற்றும் இடதுசாரி அமைப்புகளே காரணம் என பா.ஜ.க மற்றும் இத்துத்வா கும்பல் பொய் பிரசாரத்தை பரப்பி வந்தனர்.

சமீபத்தில் கூட ஜாமிய பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற போராட்டத்தில் சிலர் ஜீன்ஸ் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு மாணவர்களை தாக்கும் காட்சி வெளியானது. ஆனால் காவல் துறை அது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்கள் போல் லுங்கி மற்றும் குல்லாவை அணிந்து கொண்டு வன்முறைக்கு சதி திட்டம் தீட்டிய 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதில் ஒருவர் மேற்கு வங்க பா.ஜ.க-வைச் சேர்ந்தவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments