திருவாரூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி, போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்து வருகின்றன.


இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் மதரீதியாக இஸ்லாமியர்களை வேற்றுமைப் படுத்தும் முயற்சியை மத்திய அரசு கையாண்டு வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த இஸ்லாமியர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனால் திருவாரூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments