குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக இளையான்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்.!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வட்டார ஐக்கிய ஜமாஅத் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய இந்திய மக்களை மத அடிப்படையில்  பிளவுபடுத்தும் இந்திய இறையான்மைக்கு தேசிய விரோத குடியுரிமை திருத்த சட்ட மசோதா மூலம் ஈழத்தமிழர் மற்றும்
இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து 21.12.2019 சனிக்கிழமை காலை10. 30 மணியளவில், இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோவில் முன்பாக மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இளையான்குடி வட்டார ஐக்கிய ஜமாஅத் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் மற்றும் அனைத்து இயக்கங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள் 


இதில் , ஜமாத்தார்கள், ஜமாஅத்துல் உலமா சபை மற்றும்  அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள்  பெரும் திரளாக கலந்து கொண்டு இந்த சட்டத்தை அமல்படித்திய பாசிச பாஜக அரசை கண்டித்தும் இதற்கு துணைபோன அடிமை அஇஅதிமுக அரசை கண்டித்தும் தாங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.


மேலும் இளையான்குடியில் கோபாலப்பட்டிணம் சகோதரர்கள் அசாருதீன், வாசிம் அக்ரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments