முக்கண்ணாமலைப்பட்டியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்..!புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன. 

இந்த மசோதாவை கண்டித்து அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் ஜமாத் தலைவர் சாகுல் அமீது  தலைமையில் இஸ்லாமியர்கள் 
300-க்கு மேற்பட்டோர் ஒன்று கூடி மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து  குடியுரிமை சட்ட மசோதாவை திரும்ப்பெறு, மத்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்காதே ஒடுக்காதே, மத்திய அரசே மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தாதே, என கோ‌‌ஷங்களை எழுப்பினர்.

இதில் துணை ஜமாத்தலைவர் ஹூசேன் முகமது, பொருளாளர் முகமது இப்ராஹீம் உள்பட பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்திற்கு இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments