கோபாலப்பட்டிணத்தில் இணைந்தது கைகள்..! தற்காலிக கமிட்டி அமைப்பு.!புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில மாதங்களாக ஊர் ஜமாஅத்தில் நிலவிவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்தது.

கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத், வர்த்தக சங்கம், நல்லெண்ண குழு, இஸ்லாமிய ஜமாஅத் ஆகியோர் ஒருங்கிணைந்து நேற்றைய தினம் 08.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்ந கூட்டத்தில்  ஐந்து நபர்கள் கொண்ட தற்காலிக கமிட்டி ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டு உடனடியாக கமிட்டி அமைக்கப்பட்டது. அதன்படி இரு ஜமாஅத் நிக்காஹ் புத்தகம் மற்றும் கணக்குகளை தர்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கமிட்டியிடம் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் இந்த ஐந்து நபர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கமிட்டியாளர்கள் மூன்று மாதங்களுக்கு ஊரில் நடைபெறும் திருமணங்களை நடத்தி வைப்பது மற்றும் ஊர் ஜமாஅத்தின் நிர்வாக பணியை மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. வரக்கூடிய மூன்று மாதங்களில் ஊரில் எந்த ஒரு பஞ்சாயத்தும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:


1. இஸ்லாமிய ஜமாத் மற்றும் முஸ்லீம் ஜமாஅத் ஆகிய இரண்டு ஜமாஅத் நிர்வாகத்தின் நிக்காஹ் புத்தகம் மற்றும் கணக்குகளை தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள கமிட்டியிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும்.

2. தற்காலிக கமிட்டி மூன்று மாத காலம் மட்டுமே செயல்படும்.

3.ஐந்து நபர்கள் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டியாளர்களின் பெயர் விபரம்:
  1. ஜனாப். RSM. அன்சாரி
  2. ஜனாப். M. சித்திக் அலி
  3. ஜனாப். J. முஹம்மது ஹுசைன்
  4. ஜனாப். கோகன நைனா முகம்மது 
  5. ஜனாப். KM. அப்துல் காதர் 
மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து நபர்களை இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் ஒப்புதலுடன் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வருகின்ற மூன்று மாதங்கள் தற்காலிக கமிட்டி நல்லபடியாக ஊரை வழிநடத்தி அதன்பிறகு ஒரு வலிமையான ஜமாஅத்தை உருவாக்க வேண்டும் என்பது கோபாலப்பட்டிணம் மண்ணின் மைந்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒற்றுமை பற்றி குர்ஆன் வசனம்:

“அன்றி, நீங்கள் அல்லாஹுக்கும் அவனுடைய தூதருக்கும் வழிப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாக இரு)ங்கள்.

உங்களுக்குள் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியமிழந்து, உங்கள் வலிமை குன்றி விடும்.

ஆகவே நீங்கள் பொறுமையாக இருங்கள்.நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல் குர்ஆன் 8 :46).

இன்ஷா அல்லாஹ் வலிமையான ஜமாஅத் அமைய அனைவரும் துஆ செய்வோம்...

தற்காலிக கமிட்டியின் பணிகள் சிறக்க GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments