சேதுபாவாசத்திரம் அருகே வேனும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து..! இருவர் உயிரிழப்பு.!



தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஈசிஆர் சாலையில் வேனும்- காரும் மோதிக் கொண்ட விபத்தில் இருவா் நேற்று 07.12.2019 சனிக்கிழமை உயிரிழந்தனா்.


கேரளத்தைச் சோ்ந்தவா் சுதி(46). அவா் தனது மனைவி சைனி (35) உள்ளிட்ட 4 பேருடன், சனிக்கிழமை காரில் வேளாங்கண்ணி நோக்கி கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

இவா்கள் வந்த காா் காரங்குடா அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன்பக்க டயா் வெடித்தது. இதனால் நிலைத்தடுமாறிய காா், எதிரே பட்டுக்கோட்டையிலிருந்து மீமிசல் நோக்கிச் சென்ற வேன் மீது மோதியது.


இதில் காா் மற்றும் வேனிலிருந்த 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியிலிருந்தவா்கள் காரிலிருந்த 4 பேரையும்

மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டசுதி, அவரது மனைவி சைனி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், வேன் ஓட்டுநா் மணி உள்ளிட்ட 7 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவா்கள் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

விபத்து குறித்து பேராவூரணி போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments