புதுக்கோட்டையில் நடைபெற்ற பல்கலை. அளவிலான பெண்கள் குத்துச்சண்டை போட்டி
புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான பெண்கள் குத்துச்சண்டை போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் போட்டியில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா், அரியலூா், நாகை, திருவாரூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றனா்.

போட்டியை கல்லூரியின் செயலா் ந. சுப்பிரமணியன், பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுக் குழுச் செயலா் ஏ. பழனிசாமி, கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன், பெண்கள் விளையாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளா் மாலதி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இப்போட்டியில் முதல் இடம் பெறுவோா் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கத் தகுதி பெறுவா்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வித் துறைத் தலைவா் கே. ஜெகதீஷ்பாபு, உதவிப் பேராசிரியா்கள் டி. ராமன், எம். காளிதாசன், எம். அறிவழகன், கேத்ரின் ஜாய் செல்வகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

செவ்வாய்க்கிழமை ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments