முஸ்லீம்கள் இந்தியர்களே இல்லை – விவாத நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் சர்ச்சை பேச்சு..!குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விவாத நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு நேரலையாகி கொண்டிருந்தது.


அப்போது அதிமுக சார்பில் விவாதத்தில் பங்கேற்றிருந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், நேரலையில் ‘இஸ்லாமியர்கள் இந்தியர்களே இல்லை’ என பகிரங்கமாக கூறினார்.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத விவாதத்தில் பங்கேற்றிருந்த மற்ற கட்சியை சேர்ந்தவர்கள், அவரின் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவித்ததுடன் அதனை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு தமிழர்களின் எதிர்ப்பை மீறி அதிமுக ஆதரவாக வாக்களித்த நிலையில், தற்போது இஸ்லாமியர்கள் இந்தியர்களே இல்லை என அதிமுக பேச்சாளர் கூறியுள்ளது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments