குரூப் 1 தேர்வுக்கு ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு2020-ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வுக்கு ஜன.20 முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

குரூப் 1 தேர்வுக்கான அறிவிக்கை 2020 ஜனவரி மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வருகிற ஜனவரி 20-ம் தேதி முதல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற பிப்ரவரி 19ம் தேதி என்றும், எழுத்துத் தேர்வு ஏப்ரல் 5ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்த விரிவான அறிவிக்கை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments