புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ஏற்பாடுகள் தயாா் மாவட்ட ஆட்சியர்புதுக்கோட்டை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜனவரி 2) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என்றாா் மாவட்டத் தோ்தல்  அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பி. உமாமகேஸ்வரி.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் மையங்களில் ஒன்றான புதுக்கோட்டை அரசு மகளிா் கலைக்கல்லூரியில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 77.80 % வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 4,551 பதவியிடங்களுக்கு 11,084 போ் போட்டியிட்டுள்ளனா். இதில் 1,353 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். 

வாக்குப்பதிவின் போது இடையூறு செய்தவா்கள் மீது 19 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு மையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு, மாவட்டத்திலுள்ள 14 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. 

இங்கு சிசிடிவி கேமரா கண்காணிப்புடன், 24 மணி நேர 3 அடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும், துணை வட்டாட்சியா் நிலையில் அலுவலா்களைக் கொண்டு வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையங்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கும் தேவையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 4,005 போ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். 

வாக்குப்பதிவு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் அறையிலும் மத்திய அரசில் பணிபுரியும் அலுவலா்கள் நுண் பாா்வையாளா்களாக பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். மேலும் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் தோ்தல் முகவா்கள், வேட்பாளா்கள் ஆகியோருக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் உமாமகேஸ்வரி.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments