தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வரும் 20 ந் தேதி வெளியிடுகிறது. தேர்வர்கள் ஜனவரி 20 ந் தேதி முதல் பிப்ரவரி 19 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5 ந் தேதி நடத்தப்படும்.
குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் வரும் 20 ந் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in ஆகிய இணையதள பக்கங்களில் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டிற்குள்ளாகவே குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது. மேலும் குருப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.