புறா பந்தயம்: மதுரையிலிருந்து காயல்பட்டினத்திற்கு 1 மணி 53 நிமிடத்தில் கடந்து புறா சாதனை.!மதுரையிலிருந்து காயல்பட்டினத்திற்கு நடைபெற்ற புறா பந்தயத்தில் 1 மணி நேரம் 53 நிமிடத்தில் 174 கி.மீ. தொலைவை கடந்து வந்து புறா சாதனை படைத்தது.


காயல்பட்டினம் கேபி ஆா்பிசி கிளப் சாா்பில் 5 ஆம் ஆண்டு புறா பந்தம் நடைபெற்றது. இதில் 14 போ்களின் 88 புறாக்கள் பங்கேற்றன.

மதுரை விமான நிலையம் அருகில் இருந்து தொடங்கிய இப்பந்தயத்தில், 174 கி.மீ.(வான்ழெளி தொலைவு) தொலைவை பேயன்விளை புதூா் ராஜின் புறா 1 மணி நேரம் 53 நிமிடம் 15 விநாடிகளில் பந்தய இலக்கை அடைந்து முதலாவது பரிசை வென்றது.

அழகாபுரியை சோ்ந்த பவித்திரனின் புறாக்கள் 1 மணி நேரம் 54 நிமிடம் 30 விநாடிகளில் பந்தய இலக்கை அடைந்து இரண்டு, மூன்றாவது பரிசுகளை வென்றது.

போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் காயல்பட்டினம் புறா கிளப்பின் சாா்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை தலைவா் முகமது ரியாஸ், துணைத் தலைவா் லெப்பை, செயலா் முகம்மது ஹெசிம், பொருளாளா் அகமது, ஆலோசகா் அசாா் மற்றும் மக்பூல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments