தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சிதம்பரம் பள்ளி மாணவி முதலிடம்.!தேசிய ஊரக விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தேசிய அளவில் சதுரங்க விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.


இதில் தமிழகத்திலிருந்து சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி ஸ்வர்ணலட்சுமி, 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.  அதே போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கயல்விழி என்ற மாணவி  இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.  மேலும் இம்மாணவிகள் இருவரும் சர்வதேச அளவில் நேபாளில் நடைபெற உள்ள சதுரங்கப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

மேலும் மாநில அளவில் ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 12 வயதுக்குட்பட்டோர் போட்டியில் இப்பள்ளியின் மாணவன் ஜெய்சன் இரண்டாம் இடமும், 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மாணவன் மோகன் ஸ்ரீராம் இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் எஸ். குமார் மற்றும் முதல்வர் ரூபியாள்ராணி, பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் பிரபாகர்,  உடற்கல்வி ஆசிரியர்கள் உமா, விக்னேஷ், எப்சிமேரி உள்ளிட்ட பள்ளியின் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments