தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பல வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதை பார்த்தோம். ஆனால் குடிபோதையால் நடந்த விபரீத விளையாட்டு மரணத்தில் முடிந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. பரேலி மாவட்டத்தில் இஸ்ஸ்ட்நகர் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தர்மேந்திரா அவருடைய மருமகனான பிரதீப் என்பவரின் வீட்டிற்குக் சென்றுள்ளார். அங்கு 20 நிமிடத்தில் நான்கு குவாட்டர் பாட்டில்களை குடித்து முடிப்பவர்களுக்கு மேலும் எட்டு குவாட்டர் பாட்டில்கள் இலவசமாக கொடுக்கப்படும் என்ற பந்தயம் நடந்துக்கொண்டிருந்தது.

அந்த போட்டியில் தர்மேந்திரா கலந்துக்கொண்டனர். போட்டி ஆரம்பித்த பத்து நிமிடத்திலேயே தர்மேந்திரா நான்கு குவாட்டர் பாட்டில்களை எந்த விதமான கலவையும் சேர்க்காமல் குடித்து முடித்துப் பந்தயத்தில் வென்றார். எட்டு பாட்டில்களைப் பெற்றவுடன் தன் வீட்டிற்கு வந்து படுத்த ஒரு மணி நேரத்தில் ரத்த வாந்தி எடுத்து மரணமடைந்தார். இதைக்கண்ட அவரது மகன் சிங் தந்தையை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல ஆம்புலன்ஸை அழைத்தார்.

ஆனால் ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வரும் முன்னரே தேவேந்திர சிங் இறந்து விட்டார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.