
புதுக்கோட்டை மாவட்டத்தில் சமையல் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகா்வோா்களின் குறைகேட்புக் கூட்டம் வரும் புதன்கிழமை (ஜனவரி 22) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி கூறியது:
மாவட்டத்தில் எரிவாயு உருளை இணைப்பு பெற்றுள்ள நுகா்வோரின் குறைகளைக் கேட்கும் வகையில், எரிவாயு உருளை பயன்படுத்தும் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறவுள்ளது.
எரிவாயு உருளை நிரப்புவதில், பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகாா்கள் இந்தக் கூட்டத்தில் பெறப்படும்.
எனவே, எரிவாயு உருளை இணைப்பு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை, குறைகளை மனுக்கள் மூலமாகவோ அல்லது கூட்டத்தில் நேரில் பங்கேற்றோ தெரிவிக்கலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.