கோபாலப்பட்டிணம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும் (11/01/2020) நாளையும் (12/01/2020) சிறப்பு முகாம்.!



இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2020-ஆம் ஆண்டிற்கான புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி 23.12.2019 முதல் துவங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று 11.01.2020 (சனிக்கிழமை) மற்றும் 12.01.2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.


மேற்படி நிகழ்வின்போது அனைத்து தகுதியுள்ள மாணவர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள பொதுமக்கள் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை அணுகி தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பொருட்டு படிவம் 6-னை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி. இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

விண்ணப்பிக்க கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் (பெயர் சேர்த்தல் & திருத்தல்) :

  • மாற்று சான்றிதழ் (TC) 
  • ஆதார் அட்டை, 
  • குடும்ப அட்டை, 
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் - 2

மேலும் பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-லிலும், பெயர் மற்றும் விபரங்களில் திருத்தம் மேற்கொள்ள படிவம் 8-லிலும், ஒரே தொகுதியில் இடம் மாறியுள்ள வாக்காளர்கள் படிவம் 8யு-லிலும் தங்களுடைய கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்பஅட்டை, வருமான வரிதுறையினரால் வழங்கப்படும் அட்டை(PAN CARD) இவற்றில் ஏதேனும் ஒரு ஆவண நகலுடன் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள கோபாலப்பட்டிணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 22.01.2020 வரை மேற்கண்ட வாக்குசாவடி மைய அலுவலர்களிடம் அலுவலக நாட்களில் வேலை நேரம் முடிந்த பின்பு ஒரு மணிநேரம் வாக்காளர்கள் விண்ணப்பிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.எனவே சிறப்பு முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்கள் பள்ளிக்கூடம் வேலை நேரம் முடிந்தவுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments