
அறந்தாங்கி அருகே வேலைவாங்கி தருவதாக ரூ.1.35 லட்சம் மோசடி ஆன்லைன் நிறுவனம் மீது வழக்குப்பதிவு
அறந்தாங்கி அருகே வேலை வாங்கி தருவதாக ரூ.1.35 பணம் பறித்து ஏமாற்றிய நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த வேட்டனூரை சேர்ந்தவர் முத்தரசு. இவர் சைன் டாட் காம் என்ற ஆப் மூலம் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்
இதை தொடர்ந்து முத்தரசுவை தொடர்பு கொண்ட அந்த நிறுவனம் வேலைக்காக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை வங்கியில் செலுத்துமாறு கூறியது. முத்தரசு சைன் டாட் காம் நிறுவனத்தின் பினோ ஆப், பஞ்சாப் நேஷனல் பேங்க், இந்தியன் பேங்க், கனரா பேங்க் ஆகிய கணக்குகளுக்கு ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம் முத்தரசுவிற்கு எந்தவித வேலையும் வாங்கித் தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அவர் இதுகுறித்து நாகுடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.