செல்போன் கட்டணம் 30% உயரும் அபாயம்..! பேரதிர்சியில் மக்கள்



வோடபோன் ஐடியா

மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..!

இந்திய டெலிகாம் துறை ஜியோ அறிமுகதிற்கு பின் மிகவும் மோசமான நிலைமையில் இருப்பது எல்லோருக்கும் தெரியும் குறிப்பாக வர்த்தக சரிவும், வருவாய் சரிவு, நிறுவன இணைப்பு, நிறுவன மூடல் என பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்திய டெலிகாம் சந்தையின் இன்றைய சரிவுக்கு முக்கிய காரணம் ஜியோ ஆனால் ஜியோ மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை இந்த 3 வருடத்தில் கண்டுள்ளது. 20, 25 ஆண்டில் ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் அடைந்த வளர்ச்சியை ஜியோ வெறும் 3 வருடத்தில் அடைந்துள்ளது வியக்கத்தகும் விஷயம்.
தற்போது டெலிகாம் துறை அடைந்துள்ள வருவாய் சரிவை ஈடுசெய்யும் வகையில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் இணைந்து டெலிகாம் சேவை கட்டணத்தை அதிகளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இது மக்களை பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிகாம் வாடிக்கையாளர்கள்

கடந்த 3 வருடமாக ஏற்பட்ட வருவாய் சரிவை ஈடுசெய்யவும், பழைய வருவாய் நிலையை மீண்டும் எட்டிவிட வேண்டும் என இந்தியாவில் தற்போது 100 கோடிக்கும் அதிகமான டெலிகாம் வாடிக்கையாளர்கள் டெலிகாம் சேவைக்கா செலவிடும் சராசரி தொகையை அதிகரித்து வருமானம் பெற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
இதன் படி அடுத்த 2020ஆம் வருடத்தின் இறுதிக்குள் கட்டணத்தை 25 முதல் 30 சதவீதம் வரையில் உயர்த்த திட்டமிட்டு உள்ளதாக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

மலிவு விலை

உலகிலேயே இந்தியாவில் தான் தற்போது மிகவும் குறைந்த விலையில் டெலிகாம் சேவைகள் கிடைக்கிறது. இதுவே தான் டெலிகாம் நிறுவனங்களின் மோசமான வருவாய் சூழ்நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. டெலிகாம் நிறுவனங்களை வர்த்தக வீழ்ச்சியில் இருந்துத காப்பாற்ற மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் என்று கூட பார்க்காமல் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஆனால் மறுபுறம் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக பல ஆயிரம் ஊழியர்களுக்கு வீஆர்எஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.

முன்னணி நிறுவனங்கள்

AGR பிரச்சனையில் டெலிகாம் நிறுவனங்களுக்கு சாதகமாக முடிவுகளை உச்ச நீதிமன்றம் அளிக்கவில்லை, இதனால் வருவாய் அளவுகளை கூட்ட வோடபோன் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்களது டெலிகாம் சேவையின் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

வோடபோன் ஐடியா

இந்த மோசமான வர்த்தக போட்டியில் வோடபோன் ஐடியா திவாலாகி நிறுவனம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் என பல சந்தை ஆய்வுகள் கூறுகிறது. இது உண்மையானால் சந்தையில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே இருக்கும். இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஏர்டெல் மற்றும் ஜியோ அதிகளவிலான கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments